என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கைகலா சத்யநாராயணா"
- தமிழில் 'பஞ்சதந்திரம்' படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக சஞ்சீவி ரெட்டி என்ற வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.
- கேஜிஎப் படங்களை தெலுங்கில் இவர் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
பிரபல தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 87. அவரது மறைவு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1959 ஆம் ஆண்டு வெளியான 'சிப்பாயி கூத்துரு' படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைத்த அனைத்து வேடங்களையும் சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். இதுவரை 770க்கும் மேற்பட்ட படங்களில் சத்யநாராயணா நடித்துள்ளார். கடைசியாக மகேஷ் பாபுவின் 'மஹார்ஷி' படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் 'பஞ்சதந்திரம்' படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக சஞ்சீவி ரெட்டி என்ற வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். இந்தப் படத்தில் கைகலா சத்யநாராயணா பேசிய 'சின்ன கல்லு, பெத்த லாபம்' என்ற வசனம் யாராலும் மறக்க முடியாது. மேலும் 'பெரியார்' படத்தில் பெரியார் அப்பா வெங்கடப்ப நாயக்கராக தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிபட்டினம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினார். இவர் தனது ராமா பிலிம்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஏராளமான படங்களை தயாரித்து உள்ளார்.
கேஜிஎப் படங்களை தெலுங்கில் இவர் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கைகலா சத்யநாராயணா மறைவு வேதனை அளிக்கிறது. தனது குறிப்பிடத்தக்க நடிப்பு திறன் மற்றும் மாறுபட்ட பாத்திரங்களுக்காக தலைமுறைகள் கடந்து பிரபலமானவர் சத்யநாராயணா. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்